
ஆதி சிவன் முனீஸ்வரன் ஆலயத்தில் தங்க இரதத் திருவிழா; மஹிமா சிவகுமார் சிறப்பு வருகை
ஜோகூர் பாரு, பிப்ரவரி-18,
நாட்டின் மிகவும் பிரபலமான முனீஸ்வரரர் ஆலயங்களில் ஒன்றான ஜோகூர் பாரு, தம்போய் ஆதி சிவன் முனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தங்க இரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் நிகழ்வுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.
ஆலய நிர்வாகம் சார்பில் அவருக்கு ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டு மகத்தான வரவேப்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய சிவகுமார், கோயில் நிர்வாகத்தினரின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளைப் பாராட்டினார்.
தங்க இரதத் திருவிழா, இந்து கோயில்கள் புனித மரபுகளைப் பேணுவதோடு சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முக்கிய பங்கினை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர, இளைஞர்களின் ஒத்துழைப்பு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வாழ்த்திய சிவகுமார், அவர்களின் தொழில்முறை செயல்பாடு கோயில் நிர்வாகத்தின் பெருமையை உயர்த்துவதாகவும், இளம் தலைமுறைக்கு ஊக்கமாகவும் இருப்பதாகக் கூறினார்.
பக்தி, ஒற்றுமை மற்றும் கலாச்சார பெருமையை வெளிப்படுத்திய இந்த தங்க இரதத் திருவிழா, சமூகத்தின் கூட்டு ஆற்றலை பிரதிபலித்தது.



