Latestஉலகம்

ஆப்பிரிக்கா காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்; 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி

ஆப்பிரிக்கா, மே-25–ஆப்பிரிக்கா, காங்கோ (Congo) பகுதியில், எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே 15-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த தொற்று, தற்போது 11 சுகாதாரப் பகுதிகளுக்கு பரவியுள்ளது. இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் எபோலா தொற்று சந்தேகத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பான WHO தகவலின்படி, எபோலா தொற்றால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பரவலைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில சமூக மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், காங்கோவ சுற்றியுள்ள நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

எபோலா பரவும் அபாயம் இருப்பதால், 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!