Latestமலேசியா

ஈப்போவில் சாலையோரமாக மூதாட்டியைத் தாக்கிக் கொள்ளையிட்ட ஆடவனுக்கு வலை வீச்சு

ஈப்போ, பிப்ரவரி-26 – ஈப்போ, சிம்பாங் பூலாயில் சாலையோரமாக கொள்ளையில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸ் தேடி வருகிறது.

சம்பவ வீடியோ facebook-கில் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட 62 வயது மாது போலீஸில் புகார் செய்துள்ளார்.

போலீஸார்  விசாரணை மேற்கொண்டதில், Yamaha EZ115 மோட்டார் சைக்கிளோட்டி, அம்மாதுவைத் தாக்கி தங்க கை சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.

வைரலான வீடியோவில் பார்ப்பதற்கு சந்தேக நபர் உணவு அனுப்பும் வேலை செய்பவர் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!