Latestமலேசியா

ஆரஞ்சு காவல் உடை அணிய வைத்ததாக SPRM மீது Albert Tei வழக்கு

கோலாலம்பூர், ஜனவரி 8 – குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தன்னை ஆரஞ்சு நிற காவல் உடை அணிய கட்டாயப்படுத்தியதாகக் கூறி, சர்ச்சைக்குரிய வணிகர் Albert Tei, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், SPRM தலைவர் Azam Baki மற்றும் அரசையும் அவர் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்.

கடந்த மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், SPRM நடவடிக்கைகள் சட்டவிரோதமும் அரசியலமைப்புக்கு எதிரானதும் என அறிவிக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு உரிமை தமக்கு மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், முன்னாள் பிரதமர்கள் Najib Razak, Muhyiddin Yassin மற்றும் Ismail Sabri Yaakob ஆகியோர் SPRM காவலில் இருந்தபோது இவ்வாறு உடை அணியவில்லை என்றும், இது ஒருதலைப்பட்சமான செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Albert Tei மற்றும் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் Shamsul Iskandar Akin, 64,924 ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியன்று குற்றம் செய்யவில்லை என மறுத்துள்ளனர். இவ்வழக்கில், மார்ச் 13க்குள் வழக்குத் தரப்பு ஆவணங்களை பாதுகாப்பு தரப்புக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!