Latestஉலகம்

இது என்ன வேடிக்கை?; தாய்லாந்தில் வீட்டின் முன்னிருக்கும் கடையில் டெலிவரி செயலி மூலம் உணவு ஆர்டரா?

தாய்லாந்து, ஜூன் 24 – தாய்லாந்தில், வீட்டின் எதிர்புறத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில், டெலிவரி செயலியின் மூலம் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் வேடிக்கை செயல் வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

டிக்டோக்கில் வெளியிடப்பட்ட அந்த வைரல் காணொளியில், டெலிவரி ரைடர் தெருவின் குறுக்கே நடந்து சென்று, ஆர்டர் செய்த உணவை வாடிக்கையாளருக்கு ஒப்படைப்பதைக் காண முடிகின்றது.

முகவரியைச் சரிபார்த்து, ஆதாரமாக ஒரு புகைப்படத்தை எடுத்த பிறகு, தனது மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்வதற்குப் பதிலாக, அவர் உணவகத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு நடந்து செல்வது பெரும் வேடிக்கையையாய் இருந்தது.

இந்நிலையில் வலைதளவாசிகள், பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் டெலிவரி ரைடர்களையே ஆதரிக்க விரும்புகிறார்கள் என்று கேலி செய்து வருகின்றார்கள்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்டோக் பார்வைகளை ஈர்த்த அந்த காணொளியின் கீழ் நெட்டிசன்கள் பல வகையான நகைச்சுவை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!