Latestமலேசியா

இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவாக்கும் TalentCorp

இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவாக்கும் TalentCorp

புத்ராஜெயா, பிப்ரவரி-12,

KESUMA எனப்படும் மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் TalentCorp, Vetri MADANI திட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவாக்குகிறது.

மனித மேம்பாட்டுக் கழகமான HRD Corp -புடன் இணைந்து MyMahir ecosystem மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை ஒருங்கிணைக்கும் train and place model ஆகும்.

முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட Malaysian Indian Skills Initiative 2.0 அல்லது MiSI 2.0 திட்டம் 3,400 க்கும் மேற்பட்டோர் பதிவுச் செய்த வேளை, 400 பேர் பயிற்சியை முடித்தார்கள்.

தவிர, ICT, Electrical & Electronics, Aerospace, Global Business Services போன்ற துறைகளில் 300-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளையும் இது உருவாக்கியது.

இந்நிலையில், இவ்வாண்டு ஜூலை முதல் 2027 டிசம்பர் வரை கூடுதலாக 500 பங்கேற்பாளர்கள் பயனடைவார்கள் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

தொழில் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சியளித்து, அதன் பின் வேலை வாய்ப்பு வழங்கும் முறை தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

இவ்வேளையில், வெற்றியை பயிற்சி எண்ணிக்கையால் அல்லாமல், தரமான வேலை, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப நிலைத்தன்மை மூலம் அளவிட வேண்டும் என TalentCorp குழும தலைமை நிர்வாக அதிகாரி எட்வர்ட் லிங் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில், ஏற்கனவே பயிற்சி முடித்து வேலைவாய்ப்பில் இணைந்த 130 பங்கேற்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.

இது, KESUMA மற்றும் TalentCorp ஆகியவற்றின் எதிர்காலத்துக்கு தயாரான, உள்ளடக்கிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட பணியாளர்கள் உருவாக்கும் உறுதியை பிரதிபலிப்பதாக ரமணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!