
கோலாலாம்பூர், நவம்பர்-26 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லா என்றழைக்கப்படும் பத்மநாதன் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹட் காலிட் இஸ்மாயில் அதனைத் தெரிவித்துள்ளார்.
ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, இந்திரா காந்தியின் முன்னாள் கணவரையும் மகள் பிரசன்னா டீக்ஷாவையும் கண்டுபிடிக்க அனைத்து வழிகளையும் போலீஸார் தொடர்ந்து தேடுவர் என அவர் உறுதியளித்தார்.
இவ்வேளையில், BUDI95 மற்றும் SARA போன்ற அரசாங்க உதவிகளைப் பெறுவதற்காக ரிடுவான் அப்துல்லாவின் அடையாள விவரங்களைப், யாரோ ஒரு நபர் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கூற்றுகளையும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக IGP சொன்னார்.
மகளைக் காண 16 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்தி, அதன் உச்சக்கட்டமாக கடந்த சனிக்கிழமை புக்கிட் அமான் நோக்கி அமைதிப் பேரணி சென்றார்.
எனினும் மணிக்கணக்காக காத்திருந்தும் அவரால் IGP-யை சந்திக்க முடியாமல் போன நிலையில், இன்று டத்தோஸ்ரீ முஹட் காலிட் இஸ்மாயில் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.



