Latestஉலகம்

இந்தோனேசியாவில் கலவரம்; பாதுகாப்பை பலப்படுத்திய உள்ளூர் அரசு

ஜகார்த்தா, செப்டம்பர் 1 – இந்தோனேசியாவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழகிழமை டெலிவரி டிரைவர் ஒருவரை போலீஸ் வாகனம் மோதிய காட்சி வெளிவந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

மாகாசார் (Makassar ) நகரில் கவுன்சில் கட்டிடம் எரிக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர் என்று யோக்யாகார்த்தா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

இதனிடையே, இந்தோனேசிய ஜனாதிபதி தனது சீனா பயணத்தை அண்மையில் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவம் மற்றும் போலீசார் இச்சம்பவத்தை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில்
தற்போது டிக்‌டாக் தனது நேரடி ஒளிபரப்பு வசதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!