
இன,மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்குவோம் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்து
பிப்ரவரி 16 –
இந்நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு கொண்டாட்டங்களும் ஒருவரின் மதம், இனம் சார்ந்தத ஒன்றாக இருந்தாலும் அது நல்லிணக்கத்தோடு கொண்டாடப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய சீன சமுதாய மக்ககளுக்கு முதலில் எனது சீனப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மலேசியா என்றாலே அது பல்லின மக்களையும் பல்லின கலாச்சாலத்தையும் பல்வேறு மதங்களையும் கொண்ட நாடு என்பது உலக நாடுகளுக்கும் அது சார்ந்த மக்களுக்கும் நன்றாக தெரியும்.
நமது தேசத்தின் வண்ணமயமான கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகத் திகழும் சீனப் புத்தாண்டுப் பெருநாளை சீனர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் மத நல்லிணக்கத்தோடு கொண்டாடும் ஒரு விழாவாக சீனப்புத்தாண்டு இருக்க வேண்டும்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் சீனச் சமூகம் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது பலம். இந்தப் புத்தாண்டு, நம்மிடையே நிலவும் சகோதரத்துவத்தையும், ஒருவருக்கொருவர் காட்டும் மாரியாதையையும் மேலும் வலுப்படுத்தும் என்று தான் நம்புவதாக தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்தக் ‘குதிரை’ ஆண்டில் (Year of the Horse), ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும், ஆரோக்கியமும் பொங்கி வழியட்டும். துரிதமான வளர்ச்சியும், நிலையான அமைதியும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையட்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.



