
கோலாலம்பூர், பிப் 18 – சிலாங்கூர் Sepang கில் ‘கெலிங்கிற்கு சோளம் விற்பனையில்லை’ என்ற இனத்துவேச வார்த்தையை அட்டையில் எழுதி வைத்ததால், பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து சோள விற்பனையாளரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
அந்த சோள விற்பனையாளர் நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் இந்தோனேசியாவைச் சேர்ந்த அவரது மனைவியின் பயண ஆவணங்கள் காலாவதியானதை தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 505 ஆவது ( b) விதி மற்றும் நிந்தனை சட்டத்தின் கீழ் சோள விற்பனையாளர் மீது விசாரணை நடத்தப்பட்டுவரும் வேளையில் சாட்சியாக அவரது மனைவி அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதோடு அதன் முடிவுகளை அரசாங்க தரப்பு வழக்கறிஞருக்கு தெரிவிப்போம் என உசேய்ன் கூறினார்.
இதனிடையே வயது மூப்பு காரணமாக 60 வயதுடைய சோள விற்பனையாளர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக Sepang மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் GK Shan Gopal விவரித்தார்.
நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் அவரது 60 வயது மனைவி குடிநுழைவு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் .