
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர்.
மார்ச் 8-ஆம் தேதி செய்யப்பட்ட போலீஸ் புகார் தொடர்பில், விரைவிலேயே சம்ரி வாக்குமூலம் அளிப்பார் என, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் தெரிவித்தார்.
தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடச் சட்டம் ஆகியச் சட்டப் பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே மார்ச் 7-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் சம்ரி வினோத் ஓட்டிய கார் கிரிமினல் மிரட்டலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் மீதான விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளதாக அசிசீ சொன்னார்.
விரைவிலேயே அது முழுமைப்பெற்று அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அதில் 20 முதல் 31 வயது வரையிலான 6 ஆடவர்கள் விசாரணைக்குக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.



