
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – Tengku Zafrul Aziz-மலேசியாவின் முதலீட்டு மேம்பாட்டு வாரியமான Mida-வின் தலைவராக இன்று முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரதமர் அலுவலம் தெரிவித்தது.
அதனுடன் சேர்த்து அவர் சில கூடுதல் பொறுப்புகளையும் மேற்கொள்வார் எனவும் அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Tengku Zafrul கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இரண்டாவது தவணைக்கு செனட்டராக நியமிக்கப்பட்டு மலேசிய முதலீடு, வாணிபம் மற்றும் தொழிலியல் அமைச்சராக பதவிவகித்த நிலையில் அவரின் செனட்டர் தவணை நேற்றோடு முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரால் அமைச்சரவையில் தொடர முடியாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அமைச்சரவையில் நீடிக்க முடியும்.
பதவிகாலம் முடிந்த பிறகும் Tengku Zafrul-லுச்க்ய் வேறு பொறுப்பு வழங்கப்படும் ஏற்கனவே பிரதமர் கூறியிருந்த நிலையில்தான் இப்போது Mida-வின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.



