இப்படியும் நடக்குமா? சிங்கப்பூர் உணவகத்தில் சூப்பில் நெத்திலிக்குப் பதில் பல்லி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

சிங்கப்பூர், ஜூலை 21 – கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஜாலான் பிராஸ் பாசாவிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சூப் கிண்ணத்தில் பல்லி இருப்பதைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
22.00 மலேசிய ரிங்கிட்டுக்கு அதிக விலையில் வாங்கப்பட்ட அந்த சூப்பை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான் அதில் பல்லி இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.
சம்பவத்தை உடனடியாக அந்த உணவு விடுதி உரிமையாளரிடமும் தொழிலாளர்களிடமும் தெரிவித்த போது முதலில் அவர்கள் அதை நெத்திலி என்று வாதாடியுள்ளார்கள்.
பின்பு, உன்னிப்பாக பரிசோதித்தவுடன் அவர்கள் இறுதியாக தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டு வாடிக்கையாளரின் கட்டணத்தைத் திருப்பித் தந்தனர் என்று உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், கடை ஊழியர் உணவு தயாரிக்கும் போது பல்லி கூரையிலிருந்து கவனிக்கப்படாமல் விழுந்திருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளார்.