
ஓவிடோ ஸ்பெயின், மே 8- கடந்த மூன்றாண்டுகளாக, கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து, தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
2021-ஆம் ஆண்டு, ஜெர்மனிலிருந்து ஸ்பெயினுக்கு, குடும்பத்துடன் குடிபெயர்ந்த இத்தம்பதியின் குழந்தைகளை, வெளியில் பார்த்ததே இல்லை என்கின்றார் புகார் கொடுத்த அண்டை வீட்டார். மேலும், குழந்தைகள் அறையின் ஜன்னல், அவ்வப்போது திறந்து மூடப்படுவது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தியதாக அவர் கூறினார்.
தொடர்ந்து, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பெற்றோரை விசாரிக்க வந்தபோது, அடைப்பட்டிருந்த 3 குழந்தைகளுமே மீட்கப்பட்டனர். 8 வயதிற்கு மேற்பட்ட அம்மூன்று சிறுவர்களும் மூச்சு விட முடியாதபடி முகக்கவசங்களும், மற்றும் டயப்பர்கள் அணிந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட இந்த ஜோடிக்கு ‘கோவிட் சின்ரம்’ இருப்பதும் குழந்தைகள் மலச்சிக்கல் மற்றும் மற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது, அத்தம்பதி, 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வதோடும், புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டால் தண்டனை நீட்டிக்கப்படலாம் என்றும் அறியப்படுகின்றது.