
காஜாங், செப்டம்பர் 18 – வகுப்பு தோழரை அறைந்த சம்பவத்தில் சிக்கிய இரு ஒன்றாம் படிவ மாணவர்களுக்கு, இன்று நீதிமன்றம் ஓராண்டு கால நன்னடத்தை பத்திர உத்தரவை (Good Behaviour Bond) எந்தவொரு காப்புறுதியும் இன்றி விதித்தது.
மேலும் அவ்விருவருக்கும் தலா 500 ரிங்கிட் ஜாமீன் தொகையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று காஜாங் பகுதியிலுள்ள வணிக வளாகமொன்றில் 13 வயது மாணவனை அறைந்ததாக இவ்விரு சிறுவர்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.
முன்னதாக, 4 மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.