
வாஷிங்டன், மார்ச்-4-மேற்காசியாவின் பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், மத்தியக் கிழக்கில் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சில நாடுகளில் விமானச் சேவைகள் மற்றும் வான்வழி பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் இனியும் காலம் கடத்தாமல் பஹ்ரேய்ன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேலில் மேற்குக் கரை மற்றும் காசா, ஜோர்டான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஏமன் ஆகிய 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருக்கும் வணிக விமானங்களின் மூலம் நாடு திரும்புமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளைக் குறி வைத்தும் ஈரான் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அவசர உத்தரவு வெளியாகியுள்ளது.



