
கோலாலம்பூர், டிச 30 – சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் இருந்து ஸ்கூட் ( Scoot) விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணித்த பயணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருமுறை இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
விமானம் இரவு மணி 7.10 மணிக்குப் புறப்படும் நேரத்தை கடந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் சிங்கப்பூருக்குப் புறப்படவில்லை என்று TR469 விமானப் பயணிகளில் ஒருவரான ஜேசன் டான் ( Jason Tan) ஆசியான் ஒன் இணையத்தளத்தின் 8 world டிடம் தெரிவித்தார்.
விமானத்தின் குளிரூட்டி இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சுவசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர். விமானத்தில் தொழிற்நுட்ப கோளாறு இருப்பதால் பயணிகளை கீழே இறங்கும்படி விமான ஊழியர் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பயணிகள் மீண்டும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் இரவு 11.30 மணிக்கு விமானம் புறப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், நள்ளிரவில் விமானம் தொடர்ந்து பயணிகள் ஏறும் இடத்திலேயே இருந்ததாகவும், அதே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளை மீண்டும் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ஜேசன் கூறினார்.
அதன்பிறகு பயணிகளுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று அவர்களின் டிக்கெட்டுகளை ரத்துசெய்யவும் அல்லது மாற்று தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய ஸ்கூட்டுக்காக காத்திருக்கும்படி கூறப்பட்டது.
டிக்கெட்டுகளை ரத்து செய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் பணத்தைத் திருப்பித் தருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர், ஆனால் இழப்பீடு குறித்து எந்த விளக்கமும் இல்லை என்ற குழப்பமான நிலையை அவர் விவரித்தார்.
இதனிடையே தனது விமான டிக்கெட்டை ரத்து செய்யவேண்டாம் என முடிவு செய்தாக Steven Kang என்ற பயணி விவரித்தார்.
Scoot ட்டால் திட்டமிடப்பட்ட அடுத்த விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்குப் புறப்பட வேண்டும், ஆனால் மாலை 5 மணியளவில்தான் அது புறப்பட்டது என்ற கருத்தையும் அவர் பதிவிட்டார்.
8 worldக்கு பதிலளிக்கும் விதமாக, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தாமதத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி, பயணிகளிடம் Scoot விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.