
புத்ராஜெயா, ஜனவரி-7,
இராணுவக் கொள்முதல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக, 17 நிறுவன இயக்குநர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
20 முதல் 60 வயது வரையிலான அந்த ஆடவர்களும் பெண்களும், MACC அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்கும் போது கைதாகினர்.
விசாரணைக்காக ஜனவரி 10 வரை அவர்களைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த 17 பேரும், இராணுவப் படையின் விநியோகம் மற்றும் பராமரிப்பு குத்தகைத் திட்டங்களைப் பெற மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இராணுவக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 26 நிறுவனங்கள் மீது MACC மேற்கொண்ட விரிவான விசாரணையில் இது அம்பலமானது.
விசாரணைகள் தொடருவதால்,
மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக MACC தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளும் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைய ஆண்டுகளில் மலேசிய இராணுவக் கொள்முதலில் நடந்த மிகப் பெரிய ஊழல் விசாரணைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.



