Latestமலேசியா

இராணுவக் கொள்முதல் விசாரணை: RM2.4 மில்லியன் பணத்தை இடமாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்திய MACC

கோலாலம்பூர், ஜனவரி-7,

இராணுவக் கொள்முதல் தொடர்பான ஊழல் விசாரணையின் போது, RM 2.4 மில்லியன் பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்ற நடவடிக்கையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தடுத்து நிறுத்தியுள்ளது.

விசாரணையில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர், அப்பணத்தை ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு மாற்ற முயன்றதாக, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த பணம் கைப்பற்றப்பட்டதாகவும், இது விசாரணைக்குட்பட்ட முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றார் அவர்.

இதனிடையே, இந்த வழக்குடன் தொடர்புடைய மூத்த இராணுவ அதிகாரியிடமும் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவுள்ளது.

விசாரணை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக MACC தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!