Latestமலேசியா

இரு பெண்கள் தொந்தரவு; ஆடவரை போலீஸ் தேடுகின்றனர்

மலாக்கா, ஏப்-24-மலாக்காவில் தாமான் கிளெபாங் உத்தாமாவில்
இரண்டு பெண்களுக்குத் தொல்லை கொடுத்ததாக நம்பப்படும் ஒரு நபரைக் காட்டும் ஒரு நிமிடம் 55 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் (Threads) தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியைத் தனது துறை கண்டறிந்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர், உதவி கமிஷனர் கிறிஸ்டோபர் பதிட் ( Christopher Patit ) தெரிவித்தார்.

இந்தக் காணொளி வைரலாகப் பரவி, சுமார் 1,300 லைக்குகள், 123 கருத்துகள் மற்றும் 358 பேருக்கு பகிரப்பட்ட போதிலும் , இதுவரை இந்தச் சம்பவம் குறித்து போலீஸிற்கு எந்தவெரு புகாரும் கிடைக்கவில்லையென அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் செய்யும்படி கிறிஸ்தோபர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!