
சென்னை, ஜூலை-27-மலேசியாவுக்கு வேலைக்கு வந்து பெரும் கொடுமைகளைச் சந்திப்பதாகவும், தன்னை அதிலிருந்து காப்பாற்றுமாறும், தமிழக இளைஞர் ஒருவர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு விடுத்துள்ள கோரிக்கை வீடியோ தமிழகத்தில் வைரலாகியுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சின்ராசு என்பவர் 2023-ஆம் ஆண்டு உணவக வேலைக்காக மலேசியா வந்ததாகவும், இந்த 3 ஆண்டுகளாக தனது முதலாளியால் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் வீடியோ வெளியிட்டுளார்.
_”முதல்வர் விஜய் அவர்களே, நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்”_ என்ன அவ்விளைஞர் விடுத்துள்ளக் கோரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞரின் தாயாரும் கண்ணீர் மல்க மகனை காப்பற்றிக் கொடுக்குமாறு கேட்டும் கானொளியும் அங்குள்ள ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
ஆனால் மலேசியாவில் அவர் எங்கு உள்ளார் எனும் மேல் விவரங்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை.



