Latestஉலகம்

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் வெளிநாட்டினர் உட்பட 7 புத்த பிக்குகள் மரணம்

 

கொழும்பு, செப்டம்பர்-26,

இலங்கையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த கேபிள் கார் விபத்தில் குறைந்தது 7 புத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா நாட்டைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.

மத்திய இலங்கையின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆசிரமத்தில், 13 பேர் அந்த கேபிள் காரில் பயணம் செய்தபோது இரவு 9 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் கூறியது.

எஞ்சிய அறுவர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்; அவர்களில் நால்வரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.

இத்துயர விபத்தில் புத்த மத துறவிகளை இழந்தது பெரும் அதிர்ச்சி என அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டு, தனது இரங்கலையும் தெரிவித்தது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடம், இலங்கையின் பழமையான வனாசிரமங்களில் ஒன்றாகும்.

அங்கு தற்போது 200-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் வசித்து வருகின்றனர்; தியான முகாம்கள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளும் அங்கு நடத்தப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!