Latestமலேசியா

இலங்கை அதிபருக்கு எதிராக நள்ளிரவில் புத்த பிக்குகள் சூனிய சடங்கு; பெரும் சர்ச்சை

கொழும்பு, அக்டோபர்-22,இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவுக்கு எதிராகச் சில புத்த பிக்குகள் சூனிய சடங்குகளை நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திசாநாயக்கவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள், மயானப் பேயாகக் கருதப்படும் ‘மகாசோனா’வை அழைத்து சிறப்பு சடங்கு நடத்தினர்.

கொழும்பிலுள்ள விஹாரமகாதேவி பூங்காவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இதற்காக மாந்திரீகச் சடங்குகளை நடத்துபவர்கள் வரவழைக்கப்பட்டு, களிமண்ணால் செய்யப்பட்ட திசநாயக்க உருவப் பொம்மையில் ஊசிகள் குத்தப்பட்ட வீடியோக்கள வைரலாகியுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புத்த பிக்கு ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

சடங்கை வழிநடத்திய புத்த பிக்கு, ‘நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை அகற்றி, நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காகவே’ இது நடத்தப்பட்டதாகக் கூறிக் கொண்டார்.

எனினும், இந்தச் சடங்கு அதிபரை நேரடியாகக் குறிவைத்து நடத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, சிறையிலிருக்கும் புத்த பிக்குவை, நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி விடுதலை செய்ய முடியாது என திசநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!