
கோலாலம்பூர், அக்டோபர்-9, பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கான கல்வி மானியங்களை நிறுத்தும் பரிந்துரை இன்னும் ஆய்வுக்கட்டத்திலேயே இருக்கிறது.
அது தொடர்பில் அமைச்சரவை இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லையென, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் சொன்னார்.
அவ்விஷயத்தில் குறிப்பிட்ட சில அம்சங்களை நன்காராய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
அரசு உதவிப் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பெரும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
உண்மையிலேயே உதவித் தேவைப்படும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து, உதவிகளை விநியோகிப்பதில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புவதாக அவர் சொன்னார்.
செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்குமென்றார் அவர்.