
கோலாலம்பூர், ஜூலை 29 – டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக அவரது குடும்பத்தினருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கொலைக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் சூழ்நிலை ஆதாரங்கள் இருந்தபோதிலும், விசாரணை அதிகாரி, ஸ்மித்தின் மரணத்தை தற்கொலை என்று வகைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் நகங்களுக்கு அடியில் சந்தேக நபரின் டி.என்.ஏ காணப்பட்டதென்று தடயவியல் அறிக்கையைப் பெற்ற போதிலும், சம்பபந்தப்பட்ட அதிகாரி உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.
அதே நேரத்தில் அந்த அதிகாரி இவ்வழக்கு தொடர்பான முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்குக் காட்டத் தவறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயதான ஸ்மிட், கடந்த 2017 ஆம் ஆண்டு கேப்ஸ்கொயர் ரெசிடென்ஸின் 20வது மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது