Latest

இவ்வாண்டு இந்தியா, பாகிஸ்தானில் அமைதியற்றச் சூழல்? மத்தியக் கிழக்கு நெருக்கடியைத் துல்லியமாகக் கணித்த ஜோதிடரின் புதிய ஆருடம்

புது டெல்லி, மார்ச்-7-மத்தியக் கிழக்கில் தற்போது நிலவும் பிரச்னையை முன்கூட்டியயே துல்லியமாகக் கணித்ததாக கூறப்படும் ‘ஜோதிடர்’ நத்தாலியா, இப்போது இந்தியா–பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த
2026-ஆம் ஆண்டில் ‘அமைதியற்ற ஆற்றல்கள்’ உருவாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் மார்ச் 21 உள்ளிட்ட சில தேதிகளில் அங்கு கலவரம் ஏற்படலாம் என
அவர் கூறியுள்ளதால் சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

‘பயண ஜோதிட நிபுணர்’ என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நத்தாலியா, செவ்வாய் (Mars) மற்றும் யுரேனஸ் (Uranus) ஆகிய 2 கிரகங்களை பிரச்னையின் மையக் காரணமாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது, வரும் டிசம்பர் தொடக்கத்தில் இந்த கிரகங்கள் ‘square’ என்ற அமைப்பை உருவாக்கி அதிர்வையும் குழப்பத்தையும் அதிகரிக்குமாம்.

ஆனால் அதற்கு முன்பு, அதே கிரகச் சேர்க்கை சற்று கிழக்கே நகர்ந்து ஜூலை வாக்கில் மத்திய ஆசியாவில் பிரச்னைகளை உருவாக்கும் என அவர் ஆருடம் கூறுகிறார்.

“எனவே இந்தியா வழியாக பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்” என வீடியோ வாயிலாக நத்தாலியா மக்களை எச்சரித்துள்ளார்.

ஆனால், நிபுணர்களோ இது வெறும் ஜோதிடக் கணிப்பு மட்டுமே…
அறிவியல் ஆதாரம் இல்லாதது என வலியுறுத்துகின்றனர்.

அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகளே உண்மையான அபாயங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெளிவுப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!