Latest

ஈப்போவில் சோகம்: பூட்டிய காருக்குள் 54 வயது நபர் சடலமாக மீட்பு

ஈப்போ,ஏப்ரல்-26-ஈப்போ, தாமான் பெர்த்தாமாவில் (Taman Pertama) நேற்று மாலை பூட்டியக் காருக்குள் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

​Taman Ng Wan Hup சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் நபர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக மாலை 6.25 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

​உடனடியாகச் சம்பவ இடம் விரைந்த ஈப்போ தீயணைப்பு வீரர்கள், உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த காரின் கதவைச் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் திறந்தனர்.

காருக்குள் இருந்த நபரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

​உயிரிழந்தவர் 54 வயதுடைய மலேசியர் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் உடல் மேல் விசாரணைக்காகவும், சவப் பரிசோதனைக்காகவும் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!