
வாஷிங்டன், மார்ச்-10-ஈரானின் அனைத்து படைகளையும் முற்றிலும் அழித்துவிட்டதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமையுடன் கூறிக் கொண்டுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு கடற்படை, தகவல் தொடர்பு மற்றும் வான்படை திறன்கள் மிகக் குறைந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்களின் பெரும்பாலானவை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
“என்றாலும், ‘பெருவெற்றியை’ நோக்கி நாங்கள் முன்னேறுகிறோம்” என்றார் அவர்.
ஈரானை தன் வழிக்குக் கொண்டு வரும் வரை ஓயப்போதில்லை என்பதில் ட்ரம்ப் உறுதியாக இருப்பதை இவரின் இப்பேச்சு காட்டினாலும் ஈரானின் புதிய தலைமைத்துவம் நீண்ட கால போருக்குத் தாக்கும் பிடிக்கும் வல்லமை இருப்பதாக அதன் அறிக்கைகள் கூறுகின்றன.
அதே சமயத்தில் தவறான இடத்தில் ட்ரம்ப் கைவித்துவிட்டார் அதனால் அமெரிக்கா விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும் என எச்சரிக்கையையும் விடுத்துள்ளது ஈரான்.



