Latestமலேசியா

ஈரானுடன் 2-வார போர்நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்; உலக எண்ணெய் விலை சரிவு

வாஷிங்டன், ஏப்ரல்-8-இன்று காலை 8 மணிக்கு ஒரு நாகரீகமே அழியப் போகிறது என கடும் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், புதியத் திருப்பமாக
ஈரானுக்கு எதிரான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு, பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif மற்றும் இராணுவத் தலைவர் Asim Munir ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அமெரிக்கா-ஈரான் மோதலில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் 10-அம்ச பரிந்துரைகளை முன்வைத்ததாகவும், அவை நடைமுறைக்கு சாத்தியமானவையே என்ற அடிப்படையிலிலும் இந்த இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்படுகின்றன.

ஆனால் இந்தத் தற்காலிக போர்நிறுத்தம், Hormuz நீரிணையை ‘உடனடியாக முழுமையாக, பாதுகாப்பாக’ திறப்பதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கும் ஈரான் ஒப்புக்கொள்ளும் நிபந்தனையின் அடிப்படையில் அமைகிறது.

இதனை “இரட்டை பக்க போர்நிறுத்தம்” என வருணித்த ட்ரம்ப், மத்தியக் கிழக்கில் நீண்ட கால அமைதிக்கு நிலைத்தன்மைக்கும் இது வழிவகுக்கும் என்றார்.

ட்ரம்ப்பின் இந்த போர்நிறுத்த அறிவிப்பின் தாக்கம் உடனடியாக உலக எண்ணெய் சந்தையில் எதிரொலித்தது.

Brent கச்சா எண்ணெய் விலை சுமார் 6 விழுக்காடு வரை குறைந்த வேளை, அமெரிக்க எண்ணெய் விலையும் சுமார் 8.5 விழுக்காடு வரை சரிந்துள்ளது.

ஆனால், போருக்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணெய் விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதலில் இன்று காலை ஒட்டுமொத்த ஈரானே தரைமட்டமாகியிருக்கும் என உலகமே அச்சப்பட்ட நிலையில், இந்தத் தற்காலிக போர்நிறுத்தம் பதற்றத்தை சற்று தணித்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!