
கோலாலம்பூர், மார்ச் -04 – உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக 26 வயதான வெண்ணிலவன் பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணி கடந்த மார்ச் 2ஆம் திகதி தொடங்கியது.
பேராக், சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் தமிழ்மொழியில் தனது இளநிலைக் கல்வி பட்டபடிப்பை முடித்து, தற்போது மொழி, தொடர்பாடல் துறையில் முதுகலைக் கல்வி பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்.
அதே சமயத்தில் பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவருமாகவும் இருக்கும் இவர் தலைமைத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
தொடக்கக்கல்வியை மகா கணேச வித்தியாசாலை, தமிழ்ப்பள்ளியில் முடித்திருக்கிறார் இவர்.
சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்.
வணிகத்துறையிலும், தலைமைத்துவத்திலும் இந்திய இளைஞர்களோடு இணைந்து தானும் முன்னேற வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோளாக கொண்டுள்ளார்.



