Latest
2026 முதல் பள்ளி மாணவர்கள் கழுத்தில் டை அணிவது கட்டாயமல்ல; கல்வி அமைச்சு அறிவிப்பு

புத்ராஜெயா, டிசம்பர்-30 – அடுத்தாண்டிலிருந்து பள்ளி மாணவர்கள் கழுத்தில் டை அணிவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
தவிர, பெற்றோருக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டால், மாணவர்கள் டையை விருப்ப அடிப்படையில் பயன்படுத்தலாம்.
ஆனால் டை அணியாத மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சு நினைவுறுத்தியது.
இக்கொள்கை, பள்ளி உடைகள் வசதியானதாகவும் நடைமுறை சார்ந்ததாகவும் இருப்பதை உறுதிச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.



