உலு சிலாங்கூர், டிசம்பர்-5, உலு சிலாங்கூர் அருகே PLUS நெடுஞ்சாலையின் 427.1 வது கிலோ மீட்டரில் நேற்றிரவு 9 மணி வாக்கில் விரைவுப் பேருந்து தடம்புரண்டு, கால்வாயில் கவிழ்ந்தது
இதனால் பேருந்திலிருந்த 20 பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
எனினும் அவர்களில் யாருக்கும் அதில் காயமேற்படவில்லை.
சம்பந்தப்பட்ட விரைவுப் பேருந்து நிறுவனம் ஏற்பாடு செய்த மாற்று பேருந்து வழியாக அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
எனினும், பேருந்து ஓட்டுநருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டு சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈப்போவிலிருந்து சிரம்பான் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தடம்புரண்ட அப்பேருந்து, பின்னர் கால்வாயில் கவிழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக உலு சிலாங்கூர் போலீஸ் கூறியது.