Latestமலேசியா

ஊடகங்களின் பங்களிப்பை அங்கீரித்த KPKT அமைச்சின் ஊடக விருதளிப்பு விழா

கோலாலம்பூர், நவம்பர்-30, அரசாங்கத்தின் கொள்கைகளையும் தகவல்களையும் மக்களிடத்தில் கொண்டுச் சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

அவற்றை விரைவாகவும் சரியாகவும் மக்களிடத்தில் சேர்த்து வரும் ஊடகங்கள் பாராட்டுக்குரியவை என, KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) கூறினார்.

KPKT-யின் திட்டங்களுக்கு ஊடகங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் தாம் நன்றி பாராட்டுவதாக, 2024-ஆம் ஆண்டுக்கான KPKT ஊடக விருதளிப்பு விழாவில் பேசிய போது அமைச்சர் சொன்னார்.

ஊடகங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கோலாலம்பூர் JW Marriott ஹோட்டலில் அவ்விழா நடைபெற்றது.

சிறந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு, சிறந்த வானொலி ஒளிபரப்பு, சிறந்த கட்டுரை, சிறந்த சமூக ஊடக உள்ளடக்கம், சிறந்த செய்திப்படம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஊடக நண்பர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதன்மை விருதான  அமைச்சர் YB KM சிறப்பு விருது தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, ஆர்.டி.எம், சின் ச்சியூ சீன நாளிதழில் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

அதன் வெற்றியாளர்களுக்கு 20,000 ரிங்கிட் ரொக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

உள்ளூரைச் சேர்ந்த 48 ஊடக நிறுவனங்கள் சார்பில் 231 படைப்புகள் இவ்வாண்டு போட்டியில் பங்கேற்றன.

வெற்றியாளர்களுக்கு அமைச்சர் ஙா கோர் மிங் விருதுகளை எடுத்து வழங்கினார்.

அமைச்சின் உயரதிகாரிகள், ஊடக நிறுவனங்களின் பிரிதிநிதிகள் என சுமார் 200 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!