Latestமலேசியா

எதிர் திசையில் வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்ட ஓட்டுநர் மனநிலை பாதிக்கப்பட்டவர்

சிரம்பான், ஜூலை 23 – சிரம்பான Jalan Tuanku Antahவில் எதிர் திசையில் தனது புரோட்டோன் சாகா ஈஸ்வரா காரை ஓட்டிய ஓட்டுனர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை முதல் முகநூலில் 25 வினாடிகளைக் கொண்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து இதனை தாங்கள் கண்டறிந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் ( Mohamad Hatta Che Din ) தெரிவித்தார்.

சிரம்பான் Prima கட்டிடத்திற்கு அருகில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டப்படுவதையும், அந்த வாகன ஓட்டுநர் தனக்கு மட்டுமின்றி பிற சாலைப் பயனர்களும் ஆபத்தில் சிக்கும் அபாயத்தையும் அந்த காணொளி காட்சியில் காணமுடிந்தது.

பந்திங் வட்டாரத்தில் 57 வயதுடைய அந்த கார் ஓட்டுநர் கண்டுப்பிடிக்கப்பட்டு சிரம்பான் மாவட்ட  போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அந்த ஆடவர் மனநிலை சிகிச்சை பிரச்னையை எதிர்நோக்கியிருந்ததோடு மருத்துவமனையில் மனநிலை சிகிச்சையை மேற்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது அந்த நபர் சீரான நிலையில் இல்லை என்று நம்பப்பட்டதோடு தனது போலீஸ் புகாரில் இதனை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளதாக முகமட் ஹட்டா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

எனினும் அவரது வாகன லைசென்ஸ், சாலை வரி அனைத்தும் செல்லத்தக்கதாக இருந்தன. போக்குவரத்து எச்சரிக்கை அடையாளத்தை பின்பற்றத் தவறியதற்காக 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 79ஆவது பிரிவு (2) இன் கீழ் அந்த ஆடவருக்கு சம்மன்  வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!