Latestமலேசியா

என் மீது சட்ட நடவடிக்கையா? நீதிமன்றத்தில் பார்ப்போம் என பாஸ் தொகுதித் தலைவருக்கு அமைச்சர் ஸ்டீவான் சிம் சவால்

கோலாலம்பூர், ஜூன்-26 – இனவாதத்தைத் தூண்டுவதாதக் கூறி தமக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பாஸ் கட்சித் தலைவர் Hadi Awang-ங்கின் மருமகனும் தொகுதி தலைவருமான Zaharuddin Muhammad அறிவித்திருக்கும் நிலையில், அதனை தைரியமாக நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக, DAP தேசியத் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டீவன் சிம் கூறியுள்ளார்.

“அந்த சுங்கை பூலோ பாஸ் தொகுதித் தலைவர் தான் இனவாதமாகப் பேசினார்; அதனை நான் எதிர்த்தேன்; இராணுவத்தைத் தற்காத்து பேசினேன்; அதற்காக என் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும், நான் சந்திக்கிறேன்” என்றார் அவர்.

அண்மையில் மலேசியாவின் குடிநுழைவு கொள்கையை பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றத்தோடு சமம்படுத்தியும் சீன வம்சாவளி அதிகாரி ஒருவர் ஆயுதப் படைகளில் lieutenant-generalலாக பதவி உயர்வு பெற்றது தொடர்பிலும், Zaharudin Muhammad ஃபேஸ்புக்கில் வைத்தப் பதிவு முன்னதாக சர்ச்சையானது.

இன்னும் 30,40 ஆண்டுகளில் மலேசியா தனது முதல் சீன வம்சாவளி பிரதமரைப் பார்க்குமென சஹாருடின் கூறியிருந்தார்.

அது இனவாதமான பதிவு என மனிதவள அமைச்சருமான ஸ்டீவன் சிம் உள்ளிட்ட சீன சமூகத் தலைவர்கள் பலர் அதனை சாடியிருந்தனர்.

ஆனால், சஹாருடினோ தனது பதிவைத் தற்காத்து பேசியதோடு, ஸ்டீவன் சிம்மும் மற்ற தலைவர்களும் வேண்டுமேன்றே தம்மை ஓர் இனவாதியாக சித்திரிப்பதாகவும், தமது உள்கருத்து புரியாமல் அவர்கள் தவறாக வியாக்கியானம் செய்து விட்டார்கள் என்றும் கூறிக் கொண்டார்.

எனவே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற முதல் சீன அதிகாரியாக lieutenant-general ஜோனி லிம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!