
கோலாலம்பூர் , ஜன 28 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட
வாகனங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மான்ய விலையில் ரோன் 95 பெட்ரோல் வாங்குவதை அரசாங்கம் தடை விதித்துள்ளது.
1961ஆம் ஆண்டின் விநியோக சட்ட கட்டுப்பாட்டின் கீழ் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1974ஆம் ஆண்டின் விநியோக விதிமுறைகளின் கட்டுப்பாட்டின் 12 A
விதிமுறையில் , நடப்பு விதிமுறையின் கீழ் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ரோன் 95 பெட்ரோல் விற்கப்பட்டதாக உள்நாடு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிஷான் முகமட் அலி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் எரிபொருள் நிலைய நடத்துனருக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலை இருந்தது.
புதிய சட்டத்தின்படி
இனி எண்ணெய் நிலையங்களை நடத்துவோர் மட்டுமின்றி வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அர்மிஷான் தெளிவுபடுத்தினார்.



