Latestமலேசியா

ஒசாகா பூங்காவில் மலேசிய யானைகள் பராமரிப்பு: 3 மலேசிய யானை பராமரிப்பாளர்கள் ஜப்பானில் பணியமர்வு

தெமெர்லோ, மே 6 -ஜப்பானின் ஒசாகா நகரின் தென்னோஜி (Tennoji) பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலேசிய யானைகளான Dara, அமோய் மற்றும் கெலாட் ஆகியவற்றை பராமரிக்க, குவாலா கந்தா தேசிய யானை பாதுகாப்பு மையமான NECCயிலிருந்து 3 யானைப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர், Orang Asli Che Wong  சமூகத்தைச் சேர்ந்த  Ali Gadong  என்பவராவார். இவருக்கு இதற்கு முன்பு இந்த மூன்று யானைகளையும் பராமரித்த அனுபவம் இருக்கிறதாம்.

NECC தலைவர் Che Ku Mohd Zamzuri கூறுகையில், அலியுடன் சுஹைமி இப்ராஹிம் மற்றும் முகமட் ஃபைசல் மேலும் இருவரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி பணியை தொடங்கியதாகவும், இரண்டு மாதங்களுக்கு அங்கு தங்கி யானைகளின் பராமரிப்பு, பழக்கப்படுத்தல் மற்றும் உடல்நல கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தேவையெனில் இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த யானைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னோஜி பூங்காவில் உள்ள யானைகள் நல்ல நிலையில் உள்ளன என்றும், தினசரி அறிக்கைகள் மற்றும் வீடியோக்கள் அவற்றின் ஆரோக்கியம் சீராக இருப்பதை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிக்கைகளின்படி, அந்த மூன்று யானைகளின் உடல் எடை கூடிவருவதாகவும், கெலாட் 250 கிலோ, தாரா 190 கிலோ, அமோய் 105 கிலோ எடை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை கண்ணீர் என்பது துக்கத்தின் அறிகுறி அல்ல; அது கண்களில் தூசி அகற்றும் இயல்பான உடல் செயல்பாடு மட்டுமே என்றும் அவர் விளக்கினார்.

இந்த யானைகள் முன்பு குவாலா கந்தாவில் இருந்து தைப்பிங் பூங்காவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானுக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!