
பாரீஸ், ஜூன்-20 – பிரான்ஸ், பாரீஸில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற PSA உலகக் கிண்ணத் ஸ்குவாஷ் தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டியில், நாட்டின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசங்கரி இறுதியாட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
நேற்றையப் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்திலுள்ள சிவசங்கரி, எகிப்தின் உலக சாம்பியனும் தொடரின் முதல் நிலை வீராங்கனையுமான அமினா ஓர்ஃபியை (Amina Orfi) 8-11, 11-10, 11-8, 11-10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றார்.
74 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மிகச் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்திய அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு டத்தோ நிக்கோல் டேவிட்டுக்குப் பிறகு இந்தத் தொடரின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் உலக தரம் வாய்ந்த மற்றொரு எகிப்திய வீராங்கனையான ஹானியா எல் ஹமாமியை (Hania El Hammamy) எதிர்கொள்கிறார்.



