
லண்டன், அக்டோபர்-5,
இத்தாலியின் மிலான் நகரிலிருந்து இங்கிலாந்தின் லண்டன் சென்ற Ryanair விமானம், 2 பயணிகளின் விசித்திர நடவடிக்கையால் பிரான்சில் அவசரமாகத் தரையிறங்கியது.
ஒருவர், தனது கடப்பிதழைக் கிழித்து அதன் பக்கங்களை மென்று தின்றுக் கொண்டிருந்தார்; மற்றொருவரோ விமானக் கழிப்பறையில் கடப்பிதழைக் கழிவுநீரில் போட்டு உள்ளே தள்ள முயன்றார்.
இச்சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சிலர் இதை “எனது வாழ்நாளிலேயே மிகப் பயமுறுத்தும் 15 நிமிடங்கள்” என விவரித்தனர்.
நிலைமை மோசமானதால், விமானி விமானத்தை பாரிசில் அவசரமாகத் தரையிறக்க முடிவுச் செய்தார்.
பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, பிரான்ஸ் அதிகாரிகள் அவ்விரு பயணிகளையும் கைதுச் செய்தனர்.
நிலைமை சீரானதும், விமானம் மீண்டும் லண்டனுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இக்கட்டானச் சூழலை விமானப் பணியாளர்கள் நிதானமாக கையாண்டதாக பயணிகளில் பலர் கூறினர்.