கோலாலம்பூர், நவம்பர்-15 – நவம்பர் 15 தொடங்கி 18 வரை பெரிய நீர் பெருக்கு ஏற்படவிருப்பதால், தீபகற்ப மலேசியாவில் 4 இடங்களில் கடல் நீ மட்டம் அதிகரிக்கக்கூடும்.
இதில் தீபகற்பத்தின் மேற்குக் கரை மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படவிருப்பதாக, JUPEM எனப்படும் ஆய்வு மற்றும் வரைபடவியல் துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 15 முதல் 17 வரை பேராக்கில் தெலுக் இந்தானும், 16 முதல் 17 வரை சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தின் South Port பயணிகள் முனையமும் பாதிக்கப்படும்.
பிறகு நவம்பர் 16 முதல் 18 வரை ஜோகூரின் Kukup பட்டணமும், கெடாவில் குவாலா கெடாவும் அதில் பாதிக்கப்படும்.
வழக்கத்திற்கு மாறான இந்த கடல் நீர் மட்ட உயர்வால், கடல் நீர் கரைக்கு வந்து கடற்கரை வெள்ளமேற்படும் அபாயம் இருப்பதாக JUPEM கூறியது.
எனவே மேற்கண்ட பகுதி வாழ் மக்கள் சற்று முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.