
கோலாலம்பூர், மே 9- கடந்த செவ்வாய்க்கிழமை, ஷா ஆலாம் அருகே (கேசாஸ்) நெடுஞ்சாலையில், வேனில் இருந்து விழுந்த பெண் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில், தன் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால், அப்பெண் வேனிலிருந்து குதித்திருப்பதாக நம்பப்படுவாதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவ்வாகனம் லைசென்ஸ் இல்லாமலேயே அவர் வேனை ஓட்டியதுதான் இவர்களின் வாக்குவாததுக்கு ஆரம்பம் என கண்டரியப்பட்டுள்ளது.
இருப்பினும் தனது மனைவி சாலையில் குதித்த பிறகும் கூட, எந்தவொரு சலனமும் இல்லாமல், தன் மனைவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் வேனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி, அந்நபரின் சிறுநீர் பரிசோதனையில், போதைப்பொருள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இக்குற்றதிற்கான மேல்கட்ட விசாரணை, தொடர்ந்து நடைபெற்று வருவதாக டத்தோ ருஸ்டி கூறியுள்ளார்.