
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியாவின் சில பகுதிகளில் மீண்டும் பதற்ற நிலை திரும்பியுள்ளதால், அங்குள்ள மலேசியர்கள் மற்றும் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Preah Vihear, Oddar Meanchey, Banteay Meanchey, Battambang, Koh Kong மற்றும் Pursat மாகாணங்களுக்கு அவசியமற்ற பயணங்களை தற்காலிகமாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், கம்போடியாவில் உள்ள மலேசியர்கள் நம்பகமான செய்திகளை மட்டுமே பின்பற்றி, உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளையும் வழிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் உதவி அல்லது அவசரத் தேவைகளுக்காக தூதரகத்தை உடனடியாக தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



