நியூ யோர்க், அக்டோபர்-26,
அறிவியலாளர்கள் கண்டுபிடித்த வேகத்தில் ஒரு சிறுகோள் அக்டோபர் 22-ஆம் தேதி பூமியைத் தாக்கியுள்ளது.
பூமியில் வந்து விழும் முன்பே விண்கற்கள் கண்டறியப்பட்டது இவ்வாண்டு இது மூன்றாவது முறையாகும்.
3 அடி சுற்றளவைக் கொண்ட அவ்விண்கல் முதலில் A11dc6D என அழைக்கப்பட்டது.
பூமியில் மோதியப் பிறகு அதன் பெயர் 2024 UQ என மாற்றப்பட்டது.
பசிஃபிக் பெருங்கடலில் விழுந்ததால், அது பொது மக்களின் கண்களுக்குத் தென்படவில்லை.
கலிஃபோர்னியா கடற்கரையில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பிரகாசமான தீப்பந்தமாக அந்த விண்வெளி பாறை வெடித்தது.
செப்டம்பரில் பிலிப்பின்ஸ் நாட்டில் தீ பந்துகளாய் வெடித்துச் சிதறிய சிறுகோளிலிருந்த வெளிப்பட்ட எரிசக்தியை விட, கலிஃபோர்னியாவில் விழுந்த சிறுகோளின் தாக்கம் குறைவானதே.
எது எப்படி இருப்பினும் பூமிக்கு அதனால் எந்த ஆபத்துமில்லை என நாசா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தினர்.