Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாம் சேமிப்புக் கிடங்கிலிருந்து கைக்குழந்தை உட்பட 20 சிறார்கள் மீட்பு

புக்கிட் மெர்தாஜாம் – ஆகஸ்ட்-2 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் சரியான உணவு, உடை மற்றும் போதியப் பாதுகாப்பின்றி ஓராண்டுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த 20 சிறார்களை, சமூக நலத்துறை மீட்டுள்ளது.

ஜூலை 21-ஆம் தேதி நடத்தப்பட்ட Ops Abai சோதனையில், ஒரு சேமிப்புக் கிடங்கிலிருந்தும், பதிவுப்பெறாத கற்றல் மையமொன்றிலிருந்தும் 4 முதல் 16 வயது வரையிலான 10 சிறுவன்களும் சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.

தாயுடன் இருந்த 15-நாள் பச்சிளங்குழந்தையும் மீட்கப்பட்டது. கைக்குழந்தை உட்பட அவர்களில் 12 பேருக்கு பிறப்புப் பத்திரமே கிடையாது.

சிலர் மலேசியர்கள், பிறர் வெளிநாட்டினர் என நம்பப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில், அவர்களில் எவருக்கும் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், 2 சிறார்கள் சட்டப்பூர்வ பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!