
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-1- கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உலு சிலாங்கூர், களும்பாங்கில் (Kalumpang) இரயில் தண்டவாளம் அருகே ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
11 மீட்டர் உயரமுள்ள Kampung Sungai Serian பாலத்திலிருந்து அது வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.சடலத்தை கண்ட பொது மக்கள் நேற்று காலை போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
கை கால்கள் கட்டப்பட்டதோடு, துணியால் தலை சுற்றப்பட்டு, வாயில் கருப்பு-வெள்ளை பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது, தடயவியல் பரிசோதனையில் தெரிய வந்தது.
உடல் அழுகிப் போனதை வைத்து பார்க்கையில், குறைந்தது 4 நாட்களுக்கு முன்பே அந்நபர் உயிரிழந்திருக்க வேண்டும் என போலீஸ் கூறியது.
எனினும் சடலத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை. இந்நிலையில் கொலைச்சம்பவமாக வகைப்படுத்தி, சந்தேக நபர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.