
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று கஜாங்கிலுள்ள இடைநிலை பள்ளியொன்றில் பயிலும் 14 வயது மாணவன், ஆசிரியரை அடித்து, மிரட்டிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
29 வயதான அந்த ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உடற்கல்வி வகுப்புகளுக்கு அம்மாணவன் செல்லாமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவனை கண்டித்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவன், ஆசிரியருடன் மோதலில் ஈடுபட்டு, பின்னர் ஆசிரியரின் முகத்தில் குத்தி, பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்திருக்கின்றான்.
இதனிடையே கைதான அம்மாணவனை இரண்டு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.