
கோலாலம்பூர், செப்டம்பர்- 29,
காஜாங் டோல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஓராண்டு குழந்தை, குழந்தைகள் பாதுகாப்பு இருக்கையில் (child seat) அமர்த்தப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் சாடியுள்ளார்.
விபத்தின் போது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, மற்றொரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டதாகவும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது பெற்றோர்களை குறை கூறுவதற்காக அல்ல மாறாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
போக்குவரத்து அமைச்சு முன்னதாக குழந்தை பாதுகாப்புக் இருக்கை கட்டாயம் என அறிவித்தபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது இத்தகைய சம்பவங்கள் அதன் அவசியத்தை வெளிக்கொணருகின்றன.
இந்நிலையில் லாரி ஓட்டுனரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் மற்றும் மதுபான தடயங்கள் எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கு அலட்சியமாகவும் ஆபத்தான வகையிலும் ஓட்டியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறினர்.