
காஜாங், ஜனவரி 26 – காஜாங் தாமான் சுங்கை சுவா, பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதாக காஜாங் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அதே நாள் பிற்பகலில், பொது இடத்தில் இரண்டு ஆண்கள் மோதிக்கொள்ளும் வீடியோ பதிவு ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை, இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் எந்த போலீஸ் புகாரும் அளிக்கவில்லை என்றாலும் சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கானது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் 1,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



