Latestமலேசியா

காதல் மறுக்கப்பட்டதாம்; பெண்ணையும் அவரது தந்தையையும் கத்தியால் குத்திக் கொலைச் செய்த ஆடவன்

ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7, காதல் மறுக்கப்பட்டதால் விரக்தியின் உச்சிக்கே சென்ற ஆடவன், அப்பெண்ணையும் அவளின் தந்தையையும் கத்தியால் குத்தி கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பினாங்கு, ஆயர் ஈத்தாம், லெங்கோக் அங்சானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் மாடி லிஃப்டின் முன்புறம் மகளும் தந்தையும் இன்று பிற்பகல் இறந்துகிடந்தனர்.

அப்போது தான் வேலை முடிந்து வீடு திரும்பியவரான 30 வயது அப்பெண்ணை, அவ்வாடவன் கத்தியால் குத்தியுள்ளான்.

அங்கிருந்த அப்பெண்ணின் 62 வயது தந்தை தடுக்கப் போன போது, அவரையும் குத்தினான்.

பின்னர் தன்னைத் தானே பல முறை கத்தியால் குத்திக் கொண்ட 32 வயது அவ்வாடவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவ இடத்தில் போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!