
கோலாலம்பூர், அக்டோபர்-11,
சுகாதாரப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, அவர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘on-call allowance’ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவிப்பதாக, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் கூறினார்.
ETAP எனப்படும் அந்த on-call அழைப்புப் பணிக்கான நிரந்தர அலவன்ஸ் தொகை சுமார் 40 சதவீதம் உயர்த்தப்படுகிறது — இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக RM120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, விடுமுறை நாட்களில் பணியிலிருக்கும் சிறப்பு மருத்துவர்களின் அலவன்ஸ் RM250-லிருந்து RM350-தாக உயர்த்தப்படும்.
அதோடு, 4,500 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிகளை நிரந்தரமாக்குவது, 935 நிரந்தர தாதிப் பணிகளை உருவாக்குவது, தனியார் மருத்துவர்களின் ஆலோசனை கட்டணமும் RM10–RM35-லிருந்து RM10–RM80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள், சுகாதாரத் துறைக்கான மடானி அரசாங்கத்தின் உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக லிங்கேஷ் குறிப்பிட்டார்.
“இப்போது எல்லா மருத்தவர்களும் தாதியர்களும் புதிய உற்சாகத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது” என அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தினார்.